மோட்டார் சைக்கிள்கள் கொள்ளை - பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

மோட்டார் சைக்கிள்கள் கொள்ளை - பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு வேண்டுகோள்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பல பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவங்கள் 7 பதிவாகியுள்ளன.

சுன்னாகம், கட்டான, புத்தளம், சீனதுறைமுகம், பொல்பிட்டிகம மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற குழுக்களால் இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இவர்கள் மோட்டர் சைக்கிளை கொள்ளையிட்டு அவற்றின் பாகங்களை அகற்றி விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு செய்வதால் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டர் சைக்கிள்களை கண்டுபிடிக்க முடியாது.

எனவே மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் அவற்றை பாதுகாப்பான முறையில் வைக்குமாறும், மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad