அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தை தலைகீழாக்கியுள்ளது - தற்போது அரசாங்கமும், பிரதமரும் தோல்வியடைந்துள்ளனர் : ரஞ்சித் மத்தும பண்டார - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தை தலைகீழாக்கியுள்ளது - தற்போது அரசாங்கமும், பிரதமரும் தோல்வியடைந்துள்ளனர் : ரஞ்சித் மத்தும பண்டார

(எம்.மனோசித்ரா)

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் சட்டம் தலைகீழாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதியையும் நீதித்துறையையும் சீரழிப்பதற்கு எதிராக எதிர்தரப்பிலுள்ள சகலருடனும் இணைந்து கலந்தாலோசித்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பிரதமரால் கூறப்படுகின்ற விடயங்கள் ஏனைய தரப்பினரால் மறுக்கப்படுகின்றன. கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமராலும், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவினாலும் கூறப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தினுள் காணப்படுகின்ற முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. தற்போது அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது. பிரதமரும் தோல்வியடைந்துள்ளார்.

சட்டத்தை தலைகீழாக்கி அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பதன் மூலம் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதியையும் நீதித்துறையையும் சீரழிப்பதற்கு எதிராக எதிர்தரப்பின் அனைத்து குழுக்களுடனும் இணைந்து கலந்தாலோசித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலாலல் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள இடமளித்து, ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அதற்கான உரிமையை வழங்காமை நியாயமற்ற செயற்பாடாகும். சபாநாயகரொருவர் இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படுவது பொறுத்தமற்றதாகும்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற போது தான் மின்சார கதிரையில் அமர்ந்துள்ளதாகக் கூறினார். எனினும் 2015 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் அந்த நிலைமையை மாற்றியமைத்தோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad