கொள்கலன்களில் கடத்தப்படும் 80 நபர்களை மீட்க அமெரிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

கொள்கலன்களில் கடத்தப்படும் 80 நபர்களை மீட்க அமெரிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை

அமெரிக்காவின், சான் அன்டோனியோ பகுதியில் லொறியொன்றின் கொள்கலனில் பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்டெடுக்கும் பணிகளை அதிகாரிகள் விரைவுபடுத்தியுள்ளனர்.

சான் அன்டோனியோ பகுதியில் 911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்பாளர் ஒருவர் லொறியின் கொள்கலனில் டஜன் கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் டெக்சாஸில் உள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஒரு குறித்த லொறியை தேடும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர்.

இது மனித கடத்தலை விசாரிப்பதில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் லொறியொன்றின் கொள்கலன்களில் 80 பேர் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad