சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரியும் 425 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரியும் 425 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரியும் 425 பேருக்கு இன்று (18) கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், சட்டமா அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி, நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அந்த வகையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு இவ்வாறு கொவிட்-19 தடுப்பூசி (Oxford AstraZeneca Covishield) வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக, மேல் மாகாணத்தில் பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பைப் பேணும் நபர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad