கொவிட் தடுப்பூசியை பெற்றார் சபாநாயகர் - இதுவரை 24 எம்.பிக்கள் ஏற்றிக் கொண்டனர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

கொவிட் தடுப்பூசியை பெற்றார் சபாநாயகர் - இதுவரை 24 எம்.பிக்கள் ஏற்றிக் கொண்டனர்

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, இன்று (17) முற்பகல் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொவிட் AstraZeneca (அஸ்ட்ராசெனகா) தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் வருகை தந்திருந்தார்.

இன்று முற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு விஜயம் செய்த, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகருடன் இராணுவ வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

கொவிட் தொற்றை தடுக்கும் நோக்கில் இந்திய அரசின் நன்கொடையாக கிடைக்கப் பெற்று தற்பொழுது இலங்கையில் தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை பொதுமக்கள் ஏற்றிக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் சபாநாயகர் இவ்வாறு தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளார்.

இந்தத் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில் இந்திய அரசுக்கு தனது நன்றிகளை தெரிவித்த சபாநாயகர், இந்திய - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

இன்று (17) நண்பகல் 12.00 மணி வரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad