நாடு முழுவதும் 16,894 அதிகாரிகள், 60 பொலிஸ் நாய்களின் உதவியுடன் 3,880 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

நாடு முழுவதும் 16,894 அதிகாரிகள், 60 பொலிஸ் நாய்களின் உதவியுடன் 3,880 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதில் 494 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 16,894 அதிகாரிகள் மற்றும் 60 பொலிஸ் நாய்கள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சோனை நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 983 பேரும், 8 சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 துளை கொண்ட துப்பாக்கி (சொட் கண்) ஒன்று மற்றும் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகள் 7 கைப்பற்றப்பட்டுள்ளதோடு, ஒரு கைக்குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 518 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இச்சோனை நடவடிக்கையில் மொத்தமாக 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் இன்றும் இச்சோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ச்சியாக பொலிஸார் இச்சோனைகளை மேற்கொள்வர் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad