மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - அறிவித்தார் மாவட்ட செயலாளர் கருணாகரன் - News View

Breaking

Post Top Ad

Friday, January 1, 2021

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - அறிவித்தார் மாவட்ட செயலாளர் கருணாகரன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமீப சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கன மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டிசெம்பெர் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பெய்துவந்த கன மழை காரணமாக பாதிப்படைந்த 11 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 321 பேருக்கு இந்த நிவாரணம் கிடைக்கவிருக்கிறது.

இது விடயமாக மாவட்டச் செயலாளர் கருணாகரன் வியாழக்கிழமை 31.12.2020 மாவட்ட தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளானவர்களில் 4593 குடும்பங்களைச் சேர்ந்த 14544 நபர்களுக்கு வெள்ளிக்கிழமை முதற்கொண்டு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தத்தமது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரணப்பணிக்காக தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினூடாக 6,612,290.00 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1630 குடும்பங்களைச் சேர்ந்த 5868 நபர்களும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 654 குடும்பங்களைச் சேர்ந்த 1930 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5263 குடும்பங்களைச் சேர்ந்த 16172 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 367 குடும்பங்களைச் சேர்ந்த 1157 நபர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 470 நபர்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 87 நபர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 480 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 152 நபர்களும், ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 1726 குடும்பங்களைச் சேர்ந்த 5538 நபர்களும், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 120 நபர்களும மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்களும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 1080 குடும்பங்களைச் சேர்ந்த 3230 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad