லசந்த, பிரகீத், தாஜூதீன் ஆகியோரின் நிலைமையா ஹரீனுக்கும் ? - கேள்வியெழுப்பியுள்ள ராஜித - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

லசந்த, பிரகீத், தாஜூதீன் ஆகியோரின் நிலைமையா ஹரீனுக்கும் ? - கேள்வியெழுப்பியுள்ள ராஜித

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் கூறப்படும் விடயங்களை நீதிமன்றத்திற்குக்கூட சவாலுக்கு உட்படுத்த முடியாது. அவ்வாறிருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களுக்காக ஜனாதிபதி உயிர் அச்சுறுத்தல் விடுப்பது பொறுத்தமானதல்ல. மேலும் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட மற்றும் வசீம் தாஜூதீன் ஆகியோரின் நிலைமையா எதிர்காலத்தில் ஹரீனுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.

நீங்கள் ஜனாதிபதியாக இருப்பதைவிட பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டதையே நாம் விரும்புகின்றோம் என்று பௌத்த மகா சங்கத்தினர் கூறியதன் பொருள் ஜனாதிபதி பதவி அவருக்கு பொறுத்தமானதல்ல என்பதேயாகும்.

மாறாக பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது வன்முறையாக செயற்பட்டதைப் போன்று இப்போதும் செயற்பட வேண்டும் என்ற கோணத்தில் அவர்கள் அதனைக் கூறவில்லை என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad