மாகாண சபைத் தேர்தல் குறித்து எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை, பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கவனம் என்கிறார் அமைச்சர் சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Monday, January 4, 2021

மாகாண சபைத் தேர்தல் குறித்து எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை, பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கவனம் என்கிறார் அமைச்சர் சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் தற்போது எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டுள்ளது.

மாகாண சபைக்கு எதிரான போராட்டங்களை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக மாற்றி விட வேண்டாம். என ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் இதுவரையில் மாகாண சபைத் தேர்தல் குறித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக நிதி அவசியமாகும். ஆகவே நெருக்கடியான சூழ்நிலையில் தேவையற்ற செலவுகளை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டு வரப்படும் என குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால் அதிக நிதி மருத்துவ துறைக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment