யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி நேற்றையதினம் இடம்பெற்றது.

மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.

இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில், போராட்டங்களின் பின்னர் அந்த தூபிக்கான அடிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தாரால் மீண்டும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad