இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க ஆவார்.

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad