மைக்ரோனேசியா தீவில் முதலாவது கொரோனா தொற்று - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

மைக்ரோனேசியா தீவில் முதலாவது கொரோனா தொற்று

தொலைதூர பசிபிக் தீவு நாடான மைக்ரோனேசியாவில் நேற்று முதலாவது கொவிட்-19 தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.

100,000 மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இந்த தொற்றின் ஆபத்து குறித்து ஜனாதிபதி டேவிட் பனுவெலோ கவலை தெரிவித்தபோதும், நாட்டு எல்லையில் வைத்தே தொற்றுச் சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“இந்த விடயம் குறித்து நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் கேட்டுக் கொண்டார்.

அரசின் கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸில் திருத்த வேலைகளுக்கு உட்பட்டிருக்கும் நிலையில் அந்தக் கப்பலின் ஊழியர் ஒருவருக்கே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நபர் மற்றும் அவரின் சகாக்கள் கப்பலிலேயே வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பாடசாலைகள், வர்த்தகங்கள், வழிபாட்டுதலங்கள் எப்போதும் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிரிபட்டி, நாவுரு, பாலாவு, டொங்கா மற்றும் டுவாலு ஆகிய தீவு நாடுகள் மாத்திரமே தொடர்ந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்படாத பகுதிகளாக நீடித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad