தெற்கில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியும் என்றால் ஏன் வடக்கில் மாத்திரம் அமைக்க முடியாது ? - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

தெற்கில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியும் என்றால் ஏன் வடக்கில் மாத்திரம் அமைக்க முடியாது ? - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

(எம்.மனோசித்ரா)

வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும் நினைவுச் சின்னங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றேனும் இதுவரையில் அப்புறப்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது எண்ணத்திற்கமைய நினைவுச் சின்னங்களை அமைக்கின்றனர். தெற்கிலுள்ள பல பல்கலைக்கழங்களிலும் இதேபோன்று வேறு பல நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுகூட இதுவரையில் இவ்வாறு உடைத்து தகர்த்தப்படவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்தினை நினைவு கூரும் முகமாகவே மாணவர்களால் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்து இரண்டு ஆண்டுகளாகவே அந்த நினைவுத் தூபி அங்கு இருக்கிறது. அவ்வாறிருக்கையில் மிகவும் அவசரமாக அதனை அங்கிருந்து அகற்றுவதற்கான நோக்கம் என்ன ?

தெற்கில் இது போன்று நினைவுத் தூபிகளை அமைக்க முடியும் என்றால் ஏன் வடக்கில் மாத்திரம் அமைக்க முடியாது ? இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற ரீதியில் நாம் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment