ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பத்திரிகை 'ஊவா தீப' மீண்டும் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பத்திரிகை 'ஊவா தீப' மீண்டும் ஆரம்பம்

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'ஊவா தீப' 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இதழ் நேற்று (25) ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பத்திரிக்கை 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்னவின் மேற்பார்வையின் கீழ் குறித்த பத்திரிக்கை மீண்டும் நேற்றைய தினம் வெளியீட்டு வைக்கப்பட்டது.

'ஊவா தீப' பத்திரிக்கை ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படவுள்ளதாகப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரசன்ன பத்மசிறி தெரிவித்துள்ளார். 

ஊவா மாகாண அரச நிறுவனங்களின் செய்திகள் உள்ளிட்ட மாகாணத்தின் முக்கிய செய்திகள் 'ஊவா தீப' பத்திரிகையில் வெளியாகவுள்ளது.

2020 இல் ஏற்பட்ட கொவிட் தாக்கம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் 'ஊவா தீப' பத்திரிக்கை பாடசாலை மாணவர்களின் கல்வி வழிகாட்டியாகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த காலப்பகுதியில் தரம் 5, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தரப் பாடத்திட்டங்கள் அடங்கிய சுமார் ஒரு இலட்சம் தமிழ் மற்றும் சிங்கள மொழி பத்திரிகை பிரதிகள் இலவசமாக ஊவா மாகாணத்தில் பகிரப்பட்டதாகப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, பிரதி பிரதான செயலாளர் மங்கள விஜயநாயக, கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, உதவி செயலாளர் சுவிமாலி திஸாநாயக்க, பிரதான செய்தி ஆசிரியர் பிரசன்ன பத்மசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment