பணிப்பாளரும், இராஜினாமா நாடகமும் - News View

About Us

About Us

Breaking

Friday, January 29, 2021

பணிப்பாளரும், இராஜினாமா நாடகமும்

இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்டகால தேவைப்பாடாக இருந்த முஸ்லீம் கலாச்சார திணைக்களம் 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார விடயங்களை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் உட்பட இலங்கை வக்ப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என இத்திணைக்களத்தின் பணி நிண்டதாகும். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் மதஸ்தாபனங்களின் அபிவிருத்தியிலும் பங்குகொள்ளும் ஒரு அரச நிறுவனமாக திகழ்வதும் விசேட அம்சமாகும்

இத்திணைக்களத்தின் வெற்றிகரமான செயற்பாட்டிற்கு பலர் காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் உயரதிகாரிகள் என பலரின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.

அதுபோல ஆட்சியாளர்களும், தனவந்தர்களும் முஸ்லீம்கள் மீதான நன்மதிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தியதற்கான சான்றுகளில் ஒன்றாக திருமதி சறீமணி அத்துலத் முதலி அவர்கள் காணி அன்பளிப்பு செய்யப்பட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் இத்திணைக்கள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்லை நாட்டி, ஆரம்பித்து அது இன்று பெரும் கட்டிடமாக கம்பீரமாக காட்சி தருகிரது.

இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட இந்நிறுவனத்தில் பல திறமையானவர்கள், பணிப்பளர்களாகவும் உயரதிகாரிகளாகவும் பணி செய்த போதும் இந்நிறுவனத்தை நளீமிக்கள் மாத்திரம் தான் ஆள முடியும் என்பதாக ஒரு எழுதப்படாத சட்டம் மறைமுகமாக பின்பற்றப்படுவது கவலைக்குரியதும் சிந்திக்க கூடியதுமாகும்.

இத் தொடரில் தான் இன்றைய பணிப்பாளராக (அடாவடியாக ) கடமையாற்றும் ஏ.பீ.எம் அஷ்ரப் என்பவரும் தான் இப்பதவியில் இருந்து இம்மாதம் 01 திகதி (ஜனவரி ) அன்று இராஜினாமா செய்த போதும் இதுவரை காலமும் அப்பதவியில் இருந்து செல்லாது இருப்பது ஏன்?

தேவை கருதி வரும் பள்ளி நிர்வாகத்தினருக்கு திருட்டுப் பட்டம் சூட்டுவது .தனக்கு தேவையானவர்கள் / சார்பானவர்கள் வந்தால் சிற்றூழியர்களைக் கொண்டு உபசரித்து நல்லவன் போல நடிப்பதும். திணைக்களத்தில் ஒருசிலரைத் தவிர ஏனையவர்களுடன் சண்டித்தனமான முறையில் அலுவலகர்களுடன் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொல்லுதல் போன்ற தனக்குரிய சர்வாதிகார பாணியில் நடந்து கொள்ளுகின்றார்.

இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குர்ஆன் பாடசாலைகள், அஹதியா பாடசாலைகள், அரபு மத்ரஸாக்கள் மற்றும் அனாதை இல்லங்களின் அசையும்,அசையாத சொத்து விபரங்களை பேரின சக்திகளுக்கு வழங்கும் இரகசிய முகவராக செயற்படுகின்றார் .

அது மட்டுமல்லாமல் மீண்டும் அதே கதிரையில் தொடர வேண்டும் என்பதற்காக திணைக்களத்தில் பணி புரிகின்ற சக ஊழியர்கள் மத்தியில் தன்னை ஒரு உத்தமனாக காட்டி அவ் ஊழியர்களை தனது சதிவலைக்குள் சிக்க வைத்து அவர்களை கொண்டு தான் நல்லவர் என்றும், நான் தான் பணிப்பாளர் பதவிக்கு பொறுத்தமானவர் என்றும் தானே அப்பதவியில் தொடர வேண்டும் என்றும் அவர்களின் சொந்த அபிப்ராயம் போன்று அவர்களை கொண்டே கடிதங்களை எழுத வைத்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பதன் நோக்கம் என்ன? 

இராஜினாமா செய்த அடுத்த நாளே "அரசியல் அழுத்தங்களால் இராஜினாமா செய்தேன்" என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டவர் இதுவரை விலகிச்செல்லாமல் இருப்பதன் காரணம் என்ன?

சகோதரர் அஷ்ரப் அவர்களே முடிந்தால் நீங்கள் வேறு ஒரு அரச நிறுவனத்தில் இணைந்து காட்டுங்கள் பார்க்கலாம். உங்களால் முடியாது. வேறெந்த அரச நிறுவனங்களும் உங்களை ஏற்பதற்கு தயாரில்லை ஏனெனில் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக எதுவும் செய்யக் கூடியவர் என்றும் நீங்கள் கறைபடிந்தவர் என்றும் ஆழுமையற்றவர் என்பதுவும் யாவரும் அறிந்த ஒன்றே. 

உங்கள் சுயநலத்திற்காக மூன்று தசாப்தங்களாக கட்டிக் காத்த இந்நாட்டு முஸ்லீம்களின் சொத்தான இத்திணைக்களத்தை அழித்து விடாதீர்கள்.

இந்நிறுவனத்தில் கடமையாற்றிய பலர் நல்ல பெயரோடு தான் ஓய்வு பெற்று சென்றார்கள். எம். ஐ. எம். அமீர் மற்றும் வை .எல் .எம் .நவவி போன்றவர்கள் மிக நீதமாகவும் நேர்மையாகவும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்த கனவான்கள். அவ்வாறானவர்களையே சமூகம் வேண்டி நிற்கிறது.

ஆனால் நீங்களோ உங்கள் தேவைக்காக இந்நிறுவனத்தை சீரழிப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

எத்தனையோ பேர் தகுதியும் திறமையும் உள்ள பலர் இச்சேவையில் பல ஆண்டுகளாக கடமைபுரிகின்ற நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கும் வாய்ப்புகளை கொடுக்கின்ற போது மேலும் பல அபிவிருத்திகளை இத்திணைக்களம் காண முடியும் என்கிற நம்பிக்கையை திறமையான அதிகாரிகள் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். பணிப்பாளரும் இராஜினாமா நாடகமும்

இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்டகால தேவைப்பாடாக இருந்த முஸ்லீம் கலாச்சார திணைக்களம் 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார விடயங்களை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் உட்பட இலங்கை வக்ப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என இத்திணைக்களத்தின் பணி நிண்டதாகும். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் மத ஸ்தாபனங்களின் அபிவிருத்தியிலும் பங்குகொள்ளும் ஒரு அரச நிறுவனமாக திகழ்வதும் விசேட அம்சமாகும்

இத்திணைக்களத்தின் வெற்றிகரமான செயற்பாட்டிற்கு பலர் காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் உயரதிகாரிகள் என பலரின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.

அதுபோல ஆட்சியாளர்களும் முஸ்லீம்கள் மீதான நன்மதிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தியதற்கான சான்றுகளில் ஒன்றாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இத்திணைக்களத்திற்கான சொந்த கட்டிடத் தொகுதிக்கான அடிக்கலை நாட்டி, ஆரம்பித்து அது இன்று பெரும் கட்டிடமாக கம்பீரமாக காட்சி தருவது.

இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட இந்நிறுவனத்தில் பல திறமையானவர்கள், பணிப்பளர்களாகவும் உயரதிகாரிகளாகவும் பணி செய்த போதும் இந்நிறுவனத்தை நளீமிக்கள் மாத்திரம் தான் ஆள முடியும் என்பதாக ஒரு எழுதப்படாத சட்டம் மறைமுகமாக பின்பற்றப்படுவது கவலைக்குரியதும் சிந்திக்க கூடியதுமாகும்.

இத் தொடரில் தான் இன்றைய பணிப்பாளராக (அடாவடியாக ) கடமையாற்றும் ஏ.பீ.எம் அஷ்ரப் என்பவரும் தான் இப்பதவியில் இருந்து இம்மாதம் 01 திகதி (ஜனவரி ) அன்று இராஜினாமா செய்த போதும் இதுவரை காலமும் அப்பதவியில் இருந்து செல்லாது இருப்பது ஏன்?

தேவை கருதி வரும் பள்ளி நிர்வாகத்தினரை திருட்டுப் பட்டம் சூட்டுவது .தனக்கு தேவையானவர்கள் / சார்பானவர்கள் வந்தால் சிற்றூழியர்களைக் கொண்டு உபசரிப்பது மற்றும் சிற்றூழியர்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொல்லுதல் போன்ற தனக்குரிய சர்வாதிகார பாணியில் நடந்து கொள்ளுகின்றார்.

இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குர்ஆன் பாடசாலைகள், அஹதியா பாடசாலைகள், அரபு மத்ரஸாக்கள் மற்றும் அனாதை இல்லங்களின் அசையும்,அசையாத சொத்து விபரங்களை பேரின சக்திகளுக்கு வழங்கும் இரகசிய முகவராக செயற்படுகின்றார் .

அது மட்டுமல்லாமல் மீண்டும் அதே கதிரையில் தொடர வேண்டும் என்பதற்காக திணைக்களத்தில் பணி புரிகின்ற சக ஊழியர்கள் மத்தியில் தன்னை ஒரு உத்தமனாக காட்டி அவ் ஊழியர்களை தனது சதிவலைக்குள் சிக்க வைத்து அவர்களை கொண்டு தான் நல்லவர் என்றும், நான் தான் பணிப்பாளர் பதவிக்கு பொறுத்தமானவர் என்றும் தானே அப்பதவியில் தொடர வேண்டும் என்றும் அவர்களின் சொந்த அபிப்ராயம் போன்று அவர்களை கொண்டே கடிதங்களை எழுத வைத்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பதன் நோக்கம் என்ன? 

இராஜினாமா செய்த அடுத்த நாளே "அரசியல் அழுத்தங்களால் இராஜினாமா செய்தேன்" என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டவர் இதுவரை விலகிச்செல்லாமல் இருப்பதன் காரணம் என்ன?

சகோதரர் அஷ்ரப் அவர்களே முடிந்தால் நீங்கள் வேறு ஒரு அரச நிறுவனத்தில் இணைந்து காட்டுங்கள் பார்க்கலாம். உங்களால் முடியாது. வேறெந்த அரச நிறுவனங்களும் உங்களை ஏற்பதற்கு தயாரில்லை ஏனெனில் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக எதுவும் செய்யக் கூடியவர் என்றும் நீங்கள் கறைபடிந்தவர் என்றும் ஆழுமையற்றவர் என்பதுவும் யாவரும் அறிந்த ஒன்றே. 

உங்கள் சுயநலத்திற்காக மூன்று தசாப்தங்களாக கட்டிக் காத்த இந்நாட்டு முஸ்லீம்களின் சொத்தான இத்திணைக்களத்தை அழித்து விடாதீர்கள்.

இந்நிறுவனத்தில் கடமையாற்றிய பலர் நல்ல பெயரோடு தான் ஓய்வு பெற்று சென்றார்கள். எம். ஐ. எம். அமீர் மற்றும் வை .எல் .எம் .நவவி போன்றவர்கள் மிக நீதமாகவும் நேர்மையாகவும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்த கனவான்கள். அவ்வாறானவர்களையே சமூகம் வேண்டி நிற்கிறது.

ஆனால் நீங்களோ உங்கள் தேவைக்காக இந்நிறுவனத்தை சீரழிப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

எத்தனையோ பேர் தகுதியும் திறமையும் உள்ள பலர் இச்சேவையில் பல ஆண்டுகளாக கடமைபுரிகின்ற நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கும் வாய்ப்புகளை கொடுக்கின்ற போது மேலும் பல அபிவிருத்திகளை இத்திணைக்களம் காண முடியும் என்கிற நம்பிக்கையை திறமையான அதிகாரிகள் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்..

1 comment:

  1. இதை எழுதிய கட்டுரையாளர் பபயரைக் காணவில்லை..

    ReplyDelete