கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிலர் கைது செய்யப்பட்டனர். 3,600 க்கும் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நெதர்லந்தில் ஊரடங்கு விதிக்கப்பட்ட முதல் நாளில் வன்முறை வெடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நெதர்லந்தில் முதன்முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டச்சு மீனவக் கிராமமான உர்க்கில் வைரஸ் தொற்றுப் பரிசோதனைக் கூடத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். பொலிஸ் வாகனங்களை நோக்கிக் கற்களையும் வெடிகளையும் அவர்கள் வீசினர். 

நெதர்லாந்து மக்கள் இரவு 9 மணியிலிருந்து அதிகாலை நாலரை மணி வரை வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வேலை, அவசர மருத்துவ உதவி ஆகிய காரணங்களுக்காக அந்த நேரத்தில் வெளியே செல்ல அனுமதியுள்ளது.

புதிய வகை வைரஸால் அதிக ஆபத்து நேரலாம் என்ற கவலை அதிகரித்துள்ள வேளையில், நெதர்லாந்து அரசாங்கம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை ஊரடங்கு நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad