தடுப்பூசி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது ஐரோப்பிய ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

தடுப்பூசி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது ஐரோப்பிய ஒன்றியம்

அஸ்ட்ரா செனக்காவின் கொரோனா தடுப்பூசி திட்டமிட்ட அளவில் விநியோகிக்கப்படாத நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உற்பத்தி பிராச்சினை காரணமாக திட்டமிடப்பட்ட அளவில் தடுப்பூசி வழங்க முடியவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அஸ்ட்ரா செனக்கா கடந்த வாரம் கூறி இருந்தது.

தமது தடுப்பூசி விநியோகமும் குறைக்கப்படுவதாக பைசர் - பயோஎன்டெக் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி போடுவதில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் அதிகரிப்பை தடுக்க நாடுகள் முயன்று வரும் நிலையில் தடுப்பூசி விநியோகம் தீர்க்கமான ஒன்றாக உள்ளது. எமது மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையாளர் ஸ்டெல்லா கிரிகட்ஸ் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்காக தடுப்பு மருந்தை வாங்குவதற்கு பொறுப்பு வகிப்பதோடு, தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை காரணமாக அந்த அமைப்பு விமர்சனத்திற்கு முகம்கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment