ஜோ பைடனின் பதவி ஏற்பு நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் டொனால்ட் டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

ஜோ பைடனின் பதவி ஏற்பு நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வொஷிங்டனில் 24ம் திகதி வரை அவசர நிலையை அமுல்படுத்துவதற்கான உத்தரவை டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

இதற்கிடையே கடந்த 6ம் திகதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 4 பேர் பலியானார்கள். ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தார். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து 25 வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் வருகின்ற 20ம் திகதி பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன்பாகவே டிரம்ப்பை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.

இதையடுத்து 25வது சட்ட திருத்தத்தை ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் ஜனநாயக கட்சியினர் 2வது முறையாக டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றம் இன்று கூடி ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் 25வது சட்ட திருத்தம் மீது முடிவெடுக்கும்.

அந்த அடிப்படையில் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வன்முறையை தொடர்ந்து தலைநகர் வொஷிங்டனில் பொது அவசரநிலை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் 20ம் திகதி ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் வொஷிங்டனில் அவசரநிலையை அறிவித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த அவசர நிலை வருகின்ற 24ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வன்முறையை தடுக்கும் விதமாக டிரம்பின் ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரின் டுவிட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி உள்ளது.

No comments:

Post a Comment