யுத்தத்தின் போது எவருக்காவது அநீதி நடந்திருப்பின் ஆராய அரசு தயார் - ஆணைக்குழுவை அதற்காகவே ஜனாதிபதி நியமித்தார் என்கிறார் அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

யுத்தத்தின் போது எவருக்காவது அநீதி நடந்திருப்பின் ஆராய அரசு தயார் - ஆணைக்குழுவை அதற்காகவே ஜனாதிபதி நியமித்தார் என்கிறார் அமைச்சர் கெஹெலிய

யுத்தத்தின் போது எவருக்காவது அநீதி நடந்திருந்தால் அது தொடர்பில் செயற்படத் தயாராக இருக்கிறோம். அதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியமித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

2010 முதல் 2015 காலப்பகுதியில் காலால் இழுத்தது போன்று இன்று எதிரணி செய்படுவதாக கூறிய அமைச்சர், அரசாங்கம் தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றுமென்றும் கூறினார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு Zoom தொழில் நுட்பத்தினூடாக நேற்று நடைபெற்றது. மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்தும் ஜனாதிபதி நியமித்துள்ள குழுவை எதிரணி நிராகரிப்பது குறித்தும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அமைச்சர், இணை அனுசரணையிலிருந்து விலகுவாதாக நாம் ஆரம்பம் முதல் கூறி வந்தோம். பரணகம குழு ஊடாக ஆராய்ந்து அறிக்கை வழங்கப்பட்டது. உள்ளக பொறிமுறை தொடர்பில் ஆரம்பம் முதல் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம். ஈராக்கில் அறிக்கை வௌிவர 7 வருங்கள் சென்றன. 

யுத்தம் நிறைவடைந்தது முதல் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு நாம் முகங்கொடுத்தோம். அதற்காக நாம் பரணகம உட்பட கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன நியமித்தோம். அதனூடாக தரவுகளை திறட்டி செயற்படுகையில் தான் அரசு மாறியது.

துர்ப்பாக்கியமாக மங்கள சமரவீர 30(1) யோசனைக்கு அமெரிக்காவுடன் இணைந்து இணை அனுசரணை வழங்க உடன்பட்டார். இலங்கையர் தவறு செய்ததாகவும் தண்டனை வழங்க வேண்டும் எனவும். இறுதியாக ஜெனீவா அமர்வில் திலக் மாரப்பன பங்கேற்றதோடு இதில் அரசியலமைப்பிற்கு முரணான பல விடயங்கள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

எந்த உடன்பாடு எட்டப்பட்டாலும் இதனை செயற்படுத்த சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான தடையிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. நாட்டை காட்டிக் கொடுக்கக் கூடிய உச்சபட்ச காட்டிக் கொடுப்பு இடம்பெற்றது. இதிலிருந்து வெளியில் வந்து தவறை திருத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அதனால்தான் மனித உரிமை மீறல் எங்கு நடந்துள்ளதென்பது குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். 

தருஸ்மான் அறிக்கையை நாம் நிராகரித்துள்ளோம். இணை அனுசரணை வழங்கிய யோசனை அடிப்படையற்றது. அதற்கு அமைச்சரவை அனுமதி கூட பெறப்படவில்லை. இது பக்கசார்பான செயற்பாடென அமெரிக்க நிரந்தர பிரதிநிதி நிக்கீ ஹீலி ஒதுங்கினார். 2017/2018 காலத்தில் இது நடந்தது.

இணை அனுசணை வழங்கிய குழு கூட இதிலிந்து விலகியது. அதனால்தான் புதிதாக சிந்தித்து ஏதும் குறைபாடு நடந்திருந்தால் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக உள்ளது.

யுத்தத்தில் ஏதும் நடக்காமல் இருக்காது நடக்க வாய்ப்புள்ளது. அவ்வாறான நிலையில் சரியான முடிவு எடுத்து எவருக்காவது அநீதி நடந்திருந்தால் அது தொடர்பில் செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார்.

அரசு நியமித்துள்ள குழு தொடர்பில் நம்பிக்கையில்லையென எதிரணி தெரிவித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2010-2015 காலப்பகுதியில் இவர்கள் எதிரணியில் இருந்த போது தொடர்ச்சியாக காலால் இழுத்தார்கள். அவர்களுக்கு நாடு என்ற அக்கறை கிடையாது. அரசியல் இலாபம் பெறும் நோக்கில்தான் செயற்பட்டனர். இன்றும் அவ்வாறே நடக்கின்றனர். 

எதிரணி அவ்வாறு நடப்பது இதனூடாக நிரூபணமாகிறது. நாட்டை காட்டிக் கொடுக்கும் 30(1) பிரேரணையை தொடர்ந்து முன்னெடுக்கவே எதிரணி ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த செயற்பாட்டை அரசு பொருட்டாக கொள்ளவில்லை. எமது பொறுப்பை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment