கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 200 பி.சி.ஆர்.பரிசோதனைகள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 200 பி.சி.ஆர்.பரிசோதனைகள்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். பரிசோதனை கூடத்தினூடாக நாளொன்றுக்கு 200 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை முதல் இந்த வைத்தியசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் மருத்து ஆய்வகம் அல்லது முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும்.

எனினும் எதிர்வரும் நாட்களில் 5 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த பரிசோதனை கூடத்தை அமைப்பதற்காக 13 மில்லியன் ரூபா பெருமதியான உபகரணங்கள் திஸ்ஸ டி சில்வா அமைப்பினாலும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பி.சி.ஆர். இயந்திரம் ஹேமாஸ் நிறுவனத்தினாலும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad