கடந்த 11 நாட்களில் 50 பேர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, December 31, 2020

கடந்த 11 நாட்களில் 50 பேர் உயிரிழப்பு

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் கடந்த 11 நாட்களில் விபத்துகளில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 613 வீதி மற்றும் வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. 

இதன்போது 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் சிக்கி 132 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 291 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் நாளொன்றுக்கு ஐவர் என்ற அடிப்படையில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பிருந்தும் கவனக்குறைப்பாட்டின் காரணமாக அதனை தவிர்த்துக் கொள்ள முடியாமல் போயுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தரவுகளுன் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு தரவுகள் கிடைக்கப்பெறாத விபத்துக்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad