மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா

மஸ்கெலியா காட்மோர் புரக்மோர் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. 

குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்களைச் சேர்ந்த இரு ஆண்களுக்கே தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாக குறித்த பகுதிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். 

குறித்த நபர்களுக்கு நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொற்று நோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad