புகையிரத கட்டணங்களில் எவ்வித மாற்றமுமில்லை - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

புகையிரத கட்டணங்களில் எவ்வித மாற்றமுமில்லை - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும் ரயில் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் கிடையாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் பஸ் கட்டண அதிகரிப்பையடுத்து இலங்கை போக்குவரத்து சபையும் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே பஸ்களில் பயணிகள் அனுமதிக்கின்றனர். 

இதனால் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் வகையிலேயே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டன.

அதேவேளை பயணிகள் போக்குவரத்து பஸ்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு நேற்று புதிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் மேற்படி வழிமுறைகளை தயாரிக்கும்போது போக்குவரத்து அமைச்சானது தனியார் பஸ் உரிமையாளர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad