ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்தியா, சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் - ஜனாதிபதி விளாதிமிர் புடின் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்தியா, சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் - ஜனாதிபதி விளாதிமிர் புடின்

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என ரஷிய ஜனாதிபதி விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக ரஷியா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

‘ஸ்புட்னிக் 5’ என்று அழைக்கப்படும் அந்த கொரோனா தடுப்பூசி, இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷியா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில் ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என ரஷிய ஜனாதிபதி விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார். 

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாட்டின் போது விளாதிமிர் புடின் இதனை தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் அதன் பிரேசிலிய மற்றும் இந்திய கூட்டாளிகளுடன் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது. 

மேலும் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இந்த தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தையும் எட்டியுள்ளது. இது அந்த நாடுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்லாமல், பிற நாட்டுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கும் வழிவகை செய்யும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad