மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்கள் அதே இடத்தில் தனிமைப்படுத்தப்படுவர் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்கள் அதே இடத்தில் தனிமைப்படுத்தப்படுவர் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுதல் தடை செய்யப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கு சென்றவர்கள் அதே இடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்ட பின்னர், மாகாணத்திற்கு வெளியே உள்ள பிற பகுதிகளுக்குச் சென்ற நபர்கள் அந்த இடங்களில் வைத்தே சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்கள் தொடர்பான தகவல்களைத் தேட அனைத்து பிரதேசங்களிலும் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மேல் மாகாணத்திற்கு வெளியே அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் எவரும் வருகை தந்தால் அதன் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது சுகாதார சேவைகளுக்கோ அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகள், எரிபொருள், உணவு, மின்சாரம், நீர், மருந்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் மாத்திரமே உத்தியோகபூர்வ வாகனங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக கடமைக்கான அலுவலக அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட 112 சேவை ஊழியர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.

No comments:

Post a Comment