கொரோனா மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பரவாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை - அரச மருத்து அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

கொரோனா மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பரவாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை - அரச மருத்து அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பரவாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் கண்காணிப்பு தரவுகளை வழங்காவிட்டால் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களிற்கு கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் கண்காணிப்பு தரவுகளை தாமதமின்றி சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர் மேல் மாகாணம் தொடர்ந்தும் அதிக ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணம் குறித்து மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் தாமதமின்றி முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் வயது முகவரி பெயர் போன்ற விபரங்கள் மாத்திரமில்லாமல் அவர்களின் முழுமையான தரவுகளை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எந்த தரவுகளையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment