சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள குழு - மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள குழு - மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டின் பல சிறைச்சாலைகளில் பதிவான அண்மைய சம்பவங்கள் குறித்து அமைச்சரவை மட்டத்தில் நியாயமான விசாரணை மேற்கொள்ள ஒரு குழுவை நியமிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பணிக்காக மூன்று உறுப்பினர்களுக்கும் குறையாத மேலதிக செயலாளர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்படும் என சிறைச்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை சிறைச்சாலையில் ஒரு கைதி மரணம், போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் தப்ப முயற்சி மற்றும் சிறைச்சாலையில் கைதிகளின் ஆர்ப்பாட்டங்கள் போன்ற ஏனைய விடயங்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பணிகள் இந்த குழுவிடம் வழங்கப்படும்.

மூன்று வாரங்களுக்குள் இந்த அறிக்கையை அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் சிறைச்சாலைகளுக்குள் கொவிட்-19 பரவுவது குறித்து சிறப்பு கவனம் செலுத்தவும், மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சிறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment