வீட்டு வாசலில் நின்றவர் மீது வாள் வெட்டு தாக்குதல் - பெண்கள் உட்பட ஐந்து சிறுவர்களுக்கு சிறு காயம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

வீட்டு வாசலில் நின்றவர் மீது வாள் வெட்டு தாக்குதல் - பெண்கள் உட்பட ஐந்து சிறுவர்களுக்கு சிறு காயம்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அன்புவெளிபுரம் பிரதேசத்தில் நேற்று (18) நண்பகல் நால்வர் மேற்கொண்ட வாள் வெட்டினால், 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

தமது வீட்டு வாசலில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து, தாக்குதலுக்கு உள்ளானவரின் மாமா நியாயம் கேட்ட நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இருவர் மேலும் இருவருடன் வீடு புகுந்து வாள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் குறித்த தாக்குதலினால் 39 மற்றும் 65 வயது பெண்கள் இருவர் உட்பட ஐந்து சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

தாக்குதல் நடத்திய நால்வரை உப்புவெளி பொலிஸார் தேடி வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கந்தளாய் நிருபர் - எப். முபாரக்)

No comments:

Post a Comment

Post Bottom Ad