வெடித்தது வன்முறை : பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

வெடித்தது வன்முறை : பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை

பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ (வயது 40) என்பவர் அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை பிற்பகுதியில், நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில் கேரிஃபோர் சூப்பர் மார்க்கெட்டின் கதவுகளுக்கு வெளியே ஜோனோ ஆல்பர்டோ சில்வீரா ஃப்ரீடாஸ் முகத்தில் பாதுகாவலர்கள் குத்துவதும், ஃப்ரீடாஸின் முழங்காலில் இருப்பதும் அதில் இடம்பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக் காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத் தொடங்கியுள்ளன. 

பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நடந்த இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஆன்லைன் செய்தித்தளமான ஜி 1 வெளியிட்ட செய்தியில், ஃப்ரீடாஸுக்கும் கேரிஃபோர் பல்பொருள் அங்காடி ஊழியருக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து, அவர் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதில் இரண்டு காவலர்களும் வெள்ளை நிறத்தவர் என்று ஜி 1 தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad