பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலை - கல்வி அமைச்சின் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலை - கல்வி அமைச்சின் செயலாளர்

(க.பிரசன்னா) 

கொரோனா தடுப்புக்கான செயலணியின் பரிந்துரைகளுக்குமைவாக நீண்டகால திட்டமிடல்களுடன் பாடசாலைகள் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் இது உடனடியான ஏற்பாடுகள் அல்லவெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாளை மேல் மாகாணம் மற்றும் நாட்டில் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்து ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர், இத்தீர்மானம் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லையெனவும் நீண்ட கால புரிதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதெனவும் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலையெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment