ஈராகில் அமெரிக்க தூதரகம் உள்ள அதிக பாதுகாப்பு பகுதியில் ரொக்கட் தாக்குதல் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

ஈராகில் அமெரிக்க தூதரகம் உள்ள அதிக பாதுகாப்பு பகுதியில் ரொக்கட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாதில் அமெரிக்க தூதரகம் உட்பட வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள அதிக பாதுகாப்புக் கொண்ட பகுதி மீது நான்கு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக ஈராக் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க நிலைகள் மீதான ஈரான் ஆதரவு போராளிகளின் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகளை குறைக்கும் அறிவிப்பு வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

அண்டைய அல் அலப் டார் மாவட்டத்தில் இருந்து வீசப்பட்ட இந்த ரொக்கெட் குண்டுகள் ஈராக்கிய அரச மற்றும் இராஜதந்திர கட்டிடங்கள் இருக்கும் பசுமை வலயப் பகுதியில் விழுந்ததாக ஈராக் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் இரு பாதுகாப்பு அதிகாரிகள் இந்தத் தாக்குதலால் காயமடைந்திருப்பதாக ஈராக் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad