முல்லைத்தீவில் 4 பிள்ளைகளுடன் வாழ்ந்த விதவையின் தற்காலிக வீடு தீக்கிரை - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 4, 2020

முல்லைத்தீவில் 4 பிள்ளைகளுடன் வாழ்ந்த விதவையின் தற்காலிக வீடு தீக்கிரை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ பரவியதில், அவ்வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

போரில் கணவனை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குடும்ப பெண் ஒருவரின் தற்காலிக வீட்டிலேயே நேற்றிரவு (03) தீ பரவியுள்ளது. 

இதன்போது வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள், ஆடைகள், புத்தகங்கள், ஆவணங்கள், தைய்யல் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்துள்ளன.

கணவனை இழந்த நிலையில் கூலித்தொழில் செய்து தனது நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வரும் இப்பெண்ணின் குடும்பத்திற்கு நிதந்தர வீடு கட்டிக் கொடுக்கப்பட்டபோதும், அது முழுமை பெறாத நிலையில் தற்காலிக வீட்டில் இவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

தீ விபத்து தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் கிராம பொது அமைப்புகள் விபரங்களை திரட்டி வருவதுடன், இக்குடும்பத்திற்கு முதற்கட்ட உணவு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - முல்லைக்கீதன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad