ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற ட்ரம்ப் உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற ட்ரம்ப் உத்தரவு

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க படை வீரர்கள் திரும்ப உள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈராக் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரான் நாட்டின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த படைகள் அங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

ஈராக்கில் உள்ள நேட்டோ படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஆகும். இதில் 5 ஆயிரத்து 200 பேர் அமெரிக்க வீரர்கள் ஆவர்.

இதற்கிடையே, ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் 2 ஆயிரத்து 500 பேரை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. 

இதேபோல், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்கா திரும்ப அழைத்து வர உள்ளோம் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையிடமான பென்டகன் தெரிவித்தது.

இந்நிலையில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2,500 அமெரிக்க படை வீரர்கள் திரும்ப உள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மில்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கையை 4,500 இலிருந்து 2500 ஆக குறைக்கவும், ஈராக்கில் 3000 முதல் 2500 வீரர்களை திரும்பப்பெற ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க வீரர்களை சொந்த நாட்டிற்கு திரும்பக் கொண்டு வரும் நடைமுறை அதிகரித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad