கொவிட் 19 நோய்க்கான பாதுகாப்பு மருத்துவ ஆலோசனை துண்டுப்பிரசுரம் விநியோகம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

கொவிட் 19 நோய்க்கான பாதுகாப்பு மருத்துவ ஆலோசனை துண்டுப்பிரசுரம் விநியோகம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவலின் காரணமாக முழு நாடுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் நோக்கோடு சுகாதார துறை பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர்களினால் கொவிட் 19 நோய்க்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

பேத்தாழை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.குமுதினியினால் தயாரிக்கப்பட்ட அரசின் கட்டனைக்கு அடிபணிவோம் கொரோனாவை வெற்றி கொள்வோம் என்னும் துண்டுப்பிரசுரம் பேத்தாழை பொது நூலககத்தினால் வெளியிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

வைத்தியசாலை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சனசமூக உத்தியோகத்தர் அ.காருண், பேத்தாழை பொதுநூலக ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad