பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளுக்கான விசாவை இடைநிறுத்தியது ஐக்கிய அரபு அமீரகம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளுக்கான விசாவை இடைநிறுத்தியது ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா வைரசின் 2வது அலை பரவ வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்) தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 2வது அலை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ‘‘கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad