மாணவர்களுக்கு கொரோனா - பாகிஸ்தான் பல்கலைக்கழகம் மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

மாணவர்களுக்கு கொரோனா - பாகிஸ்தான் பல்கலைக்கழகம் மூடப்பட்டது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களில், 49 கல்வி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காயிதே ஆசம் பல்கலைக்கழகம் உள்ளது. அது, அந்நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அங்கு 3 துறைகளில் பல மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 3 துறைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ‘சீல்’ வைக்கப்பட்ட துறைகளின் மாணவர்களுக்கு ‘ஒன்லைன்’ வகுப்புகள் தொடரும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 40 நாட்களில், இஸ்லாமாபாத்தில் 49 கல்வி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment