போதியளவு ஆய்வுகூட வசதிகள் இன்மையால் நெருக்கடி- பத்தாயிரம் பிசிஆர் மாதிரிகள் குறித்த முடிவை வெளியிட முடியாத நிலை - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

போதியளவு ஆய்வுகூட வசதிகள் இன்மையால் நெருக்கடி- பத்தாயிரம் பிசிஆர் மாதிரிகள் குறித்த முடிவை வெளியிட முடியாத நிலை

போதியளவு ஆய்வு கூட வசதிகள் இல்லாததன் காரணமாக கொவிட் நோயாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பிசிஆர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு மருத்துவமனைகள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த துரதிஸ்ட நிலை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் 2145 மாதிரிகளும், அனுராதபுரம் வைத்தியசாலையில் 1500 மாதிரிகளும், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 1800 பிசிஆர் மாதிரிகளும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் 4500 மாதிரிகளும் குவிந்துகிடக்கின்றன என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் குளிரூட்டல் வசதிகள் பிசிஆர் மாதிரிகளை வைத்திருப்பதற்கு போதுமானவையல்ல எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை மேற்கோள்காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக நாளாந்தம் பெறப்படும் மாதிரிகைள மருத்துவமனையின் வேறொரு அறையில் சேமிக்க வேண்டியுள்ளது எனவு குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிசிஆர் மாதிரிகளை ஆராய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் பெருமளவானவர்கள் கொரோனா வைரசின் பிடியில் சிக்கும் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்றால் அரசாங்கம் மருத்துவமனைகளில் பிசிஆர் மாதிரிகளை ஆராய்வதற்கான வசதிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினக்குரல்

No comments:

Post a Comment

Post Bottom Ad