அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Saturday, October 10, 2020

அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டன

அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நீக்கப்பட்டுள்ளதென யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்

கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப் பிரிவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம், இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

அண்மையில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே கொரோனா அச்சம் காரணமாக அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad