ஓய்வு பெறவுள்ள விமானப் படைத் தளபதி பிரதமருடன் சந்திப்பு - ஆதரவுக்கும், சேவைக்கும் இருவரும் நன்றி தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

ஓய்வு பெறவுள்ள விமானப் படைத் தளபதி பிரதமருடன் சந்திப்பு - ஆதரவுக்கும், சேவைக்கும் இருவரும் நன்றி தெரிவிப்பு

ஓய்வு பெறவுள்ள விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் இன்று (2020.10.29) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸூக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் விமானப் படையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பிரதமருக்கு விளக்கமளித்ததுடன், தனது சேவை காலத்தில் வழங்கப்பட்ட ஆதரவு தொடர்பிலும் நன்றி பாராட்டினார்.

17ஆவது விமானப் படைத் தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நாட்டிற்காக ஆற்றிய சேவை தொடர்பில் வாழ்த்து தெரிவித்த பிரதமர், கொவிட்-19 நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் விமானப் படை இதுவரை செய்த சேவைகளை பாராட்டினார்.

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி விமானப் படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான இராணுவ மனிதாபிமான நடவடிக்கையில் நேரடி பங்களிப்பு செய்த விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் கொழும்பு நாலந்தா கல்லூரியின் கீர்த்திமிக்க பழைய மாணவராவார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad