கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போலி செய்திகளும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன - இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போலி செய்திகளும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன - இராணுவத் தளபதி

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் நிலவினாலும், ஆங்காங்கே போலி செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டே வருகின்றன. சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வெளியிடப்படுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். 

இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர். எனக்கு வைத்தியர்கள் கூறுவதைத்தான் நாம் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களினால்தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அதனால்தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என அவர்கள் கூறுவதாக காரணம் என்றார். 

நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். வேறு நோய் நிலமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. 

இருப்பினும் இப்போது உயிரிழக்கும் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குறித்த இரு மரணங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad