தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா - 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா - 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள 11 கடைகள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்குச் சென்ற தொழிலதிபர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த நபருடன் நெருங்கிய தொடர்புகொண்ட இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள 11 கடைகள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தெற்று காரணமாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பணியாளர்களின் பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகளைப் பெற்ற பின்னர் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அப்பகுதியின் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment