சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயலாற்றுங்கள் - முன்னாள் சபாநாயகர் கரு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 1, 2020

சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயலாற்றுங்கள் - முன்னாள் சபாநாயகர் கரு வலியுறுத்தல்

எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு
(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3000 ஐ எட்டியிருக்கும் நிலையில், தத்தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் ஊடாக ஒட்டு மொத்த நாட்டினதும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

இலங்கையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் 3000 ஐ எட்டியிருக்கிறது. உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதனைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை நாம் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றோம்.

தற்போது நாட்டில் அனைவரும் வழமைபோன்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில், பொறுப்பு வாய்ந்த பிரஜைகள் என்ற வகையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னுரிமை வழங்கி செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் பாதுகாப்பாக இருந்தால் ஒட்டு மொத்த நாடும் பாதுகாப்பாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேவேளை நாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது, அவை சூழலின் பாதுகாப்பை முன்நிறுத்தியதாக அமைய வேண்டும் என்று மற்றொரு பதிவில் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். 

இலங்கை மிகவும் அழகான நாடு என்று குறிப்பிட்டிருக்கும் அவர், எனினும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் தொடர்பில் வெளியிடப்படும் அறிக்கைகளால் மக்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment