பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டில் காலியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு! - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டில் காலியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு (02) 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில் (வயது-38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் மதுபோதையில் இருந்தமையால் தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு (03) இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad