மீனவர்களின் தேவைக்கு செவிசாய்த்த இலங்கை மின்சார சபை : மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒளியூட்டும் நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

மீனவர்களின் தேவைக்கு செவிசாய்த்த இலங்கை மின்சார சபை : மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒளியூட்டும் நடவடிக்கை

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேச மீன்பிடி துறை இருளில் முழ்கியுள்ளதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாரிய இன்னல்களை சந்திக்கின்றனர். 

இப்பிரதேசத்தை ஒளியூட்டும் முகமாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம பொறியியலாளர் எந்திரி ஏ.ஆர்.எம்.பர்ஹான் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க எந்திரி ஏ.ஆர்.எம்.பர்ஹான் அடங்கிய குழுவினர் குறிப்பிட்ட பகுதிகளை நேற்று நேரில் வந்து பார்வையிட்டதுடன், நிலைமைகளை ஆராய்ந்து ஒளியூட்டும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சாய்ந்தமருது பிரதேச மின் அத்தியட்சகர் முஹம்மட் பயாஸிடம் கேட்டுக் கொண்டார் என மாளிகைக்காடு எம்.சி.சி. அமைப்பின் தலைவர் எம்.எச் நாஸர் தெரிவித்தார்.

மேலும் இருளாக உள்ள குறித்த பிரதேசத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் பல நாசகார செயல்களிலிருந்து மக்களையும், மீனவர்களின் உடமைகளையும் பாதுகாக்க இலங்கை மின்சார சபையின் இந்த நடவடிக்கை உதவும் என பிரதேச மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.என மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad