அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விரும்பவில்லை - முஜிபுர் ரஹ்மான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விரும்பவில்லை - முஜிபுர் ரஹ்மான்

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் 20வது திருத்தத்தை விரும்பவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் நிகழ்ச்சி நிரலை விமர்சிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு விமர்சித்தால் அவர்கள் தங்கள் பாராளுமன்ற இடத்தினை இழப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் மூலம் அமெரிக்க பிரஜைகள் கூட இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியிலிருந்தவேளை பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த தனிநபர்கள் தற்போது பதவிகள் கிடைத்ததும் மௌனமாகிவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

உத்தேச திருத்தத்தை தோற்கடிப்பதற்கு எதிர்கட்சி முயலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad