முன்னாள் அமைச்சர் சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு பயணத் தடை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

முன்னாள் அமைச்சர் சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல்ல மற்றும் துசித் திலும் குமார ஆகியோருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்த நீதவான், அது தொடர்பில் உடனடியாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதிவாதிகள் ஒவ்வொரு மாதமும் முதலாவது வௌ்ளிக்கிழமைகளில் முற்பகல் வேளையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டுமெனவும் தமது கடவுச்சீட்டுகளை மன்றில் ஒப்படைக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிரதிவாதிகளுக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாமெனவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் சம்பிக்க ரணவக்கவின் வாகனம் விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

வழக்கு தொடர்பிலான விசாரணைகள் நாளை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment