சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் - தாய்வானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு? - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் - தாய்வானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு?

சீனாவுடன் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலையில் தாய்வானுக்கு மிகப்பெரிய அளவில் ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்வான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தாய்வான் ஜனாதிபதியாக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. 

தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதற்கு, தாய்வான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில், தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தாய்வான் நாட்டிற்கு அமெரிக்கா அதிக அளவில் ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது. 

மேலும், தாய்வானுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆனால், தாய்வானை தனது நாட்டின் பகுதியாகவே கருதும் சீனா தொடர்ந்து அந்நாட்டு வான் பரப்பில் அத்துமீறி போர் விமானங்களை பறக்கவிட்டு வருகிறது. மேலும், தாய்வான் நாட்டின் கடல் பரப்பு எல்லை அருகே கடந்த சில நாட்களாக சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் இந்த அத்துமீறிம் செயல்களுக்கு தாய்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக தங்கள் நாடும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தாய்வான் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தாய்வான் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த ஆயுத விற்பனையில் ஏவுகணைகளும் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரங்களால் தாய்வான் - சீனா இடையே மோதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி கேய்த் ஹர்ச் திடீர் பயணமாக நேற்று தாய்வான் வந்தடைந்தார்.

தாய்வான் - சீனா இடையேயான மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி தாய்வான் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad