தற்கொலை குண்டுதாரியின் வீட்டை கையகப்படுத்த முயன்ற சட்டத்தரணி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

தற்கொலை குண்டுதாரியின் வீட்டை கையகப்படுத்த முயன்ற சட்டத்தரணி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

(எம்.எப்.எம்.பஸீர்) 

பம்பலபிட்டி பகுதியின் கோடீஸ்வர வர்த்தகர் சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமயலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏபரல் 21 ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள 18 கோடி ரூபா பெறுமதியான வீட்டை, போலி உறுதிப்பத்திரம் ஊடாக கையகப்படுத்திய விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

பம்பலபிட்டி பிரதேசத்தை சேர்ந்த தொடர்மாடிகலை அமைத்து விற்பனை செய்யும் கோடீஸ்வர வர்த்தகரான சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த மாலகொட, ஆமர் வீதி பகுதியைச் சேர்ந்த ராமையா பரிமாள் அழகன், நீர்கொழும்பு - கொச்சிக்கடை, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.எம். அமானுல்லாஹ், ராஜரத்னம் ராஜலிங்கம் ஆகிய சந்தேக நபர்களே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad