திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பாதாள உலக, போதைப் பொருள் அச்சுருத்தல்கைளை அரசு முடிவுக்கு கொண்டுவரும் - பாதுகாப்புச் செயலாளர் - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பாதாள உலக, போதைப் பொருள் அச்சுருத்தல்கைளை அரசு முடிவுக்கு கொண்டுவரும் - பாதுகாப்புச் செயலாளர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதற்காக நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த அதே உத்வேகத்துடன் சமூக விரோத செயல்களையும் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

"எமது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் அச்சுறுத்தல் போன்ற சமூக விரோத செயல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் நிறுவனத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மூன்று தசாப்த கால மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கான போரின் போது ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்ததை நினைவு கூர்ந்ததுடன் அவர்கள் உங்களது எதிர்காலத்திற்காகவே தங்களது நிகழ்காலத்தை தியாகம் செய்தார்கள் என குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளர், கடத்தல்காரர்கள் முக்கியமாக, இளைய தலைமுறையினரை குறிவைத்து வருவதால், தங்களைத் தாங்களே சமூக விரோத செயல்களில் இருந்து விலக்கிக்கொள்ளுமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு ரோயல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் எனும் பதவியில் முன்னாள் முகாமைத்துவ குழு உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் மேஜர் ஜெனரல் குணரத்ன கடமையாற்றியுள்ளார்.

நேர்மை, ஒருமைப்பாடு, ஒழுக்கம் மற்றும் தோழமை எனும் முக்கிய இராணுவ பண்புகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே ஞாபகங்களை நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், இதன் காரணமாகவே மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே ஒழுக்கம் மற்றும் குழு ஒருமைப்பாடு என்பவற்றை உயர்மட்டத்தில் பேணுவதற்கு ரோயல் நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு இயலுமாக இருந்ததாக தெரிவித்தார்.

விளையாட்டுக்கள் மூலம் தன்னம்பிக்கை, ஒழுக்கம், குழு ஒருமைப்பாடு என்பவற்றை சிறுவர்களின் இளம் வயதிலிருந்தே ஏற்படுத்த முடியும் என்பதால் அந்தக்காலத்தில் எமது பாடசாலைக்காக பல வெற்றிக் கோப்பைகளை எங்களால் பெற்றுக் கொடுக்க முடிந்தது" என தெரிவித்த அவர், பாடசாலை நிர்வாககுழு உறுப்பினராக பணியாற்றும் போது பாடசாலையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயற்பாட்டிற்கும் அனுமதி அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ரோயல் நிறுவனத்தின் பொன்விழா நிகழ்வில் ரோயல் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர். சரத் அமுனுகம, தவிசாளர் ஜிடி பண்டார, கல்வி செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் டொக்டர். நிரோதா பண்டார, பணிப்பாளர் நிவந்த பண்டார, பாதுகாப்பு அமைச்சினது சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன, அதிபர்கள், ரோயல் நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad