பாதுகாப்புச் செயலாளரினால் எழுதப்பட்ட 'பாதாளயோ' மற்றும் ' கோட்டாபய' புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

பாதுகாப்புச் செயலாளரினால் எழுதப்பட்ட 'பாதாளயோ' மற்றும் ' கோட்டாபய' புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ஜனாதிபதியிடம் கையளிப்பு

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 59வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரினால் எழுதப்பட்ட 'கோட்டாபய' என்னும் சிங்கள புத்தகத்தின் ஆங்கில பதிப்பும், பாதாள உலக செயற்பாடுகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நாவல் வடிவிலான 'பாத்தாளயோ' எனும் நாவலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த வெளியீட்டு வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன கேட்போர் கூடத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு செயலாளரின் "பாத்தாளயோ" நாவலானது கடந்த சில மாதங்களாக பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்ட போது கிடைக்கப்பெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதேவேளை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 'கோட்டாபய' நூலின் சிங்கள பதிப்பினது ஆங்கிலப் பதிப்பே நேற்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

'ரோட் டூ நந்திக்கடல்' (நந்தி கடலுக்குக்கான பாதை) என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரசித்தி பெற்ற 'ரண மக ஒஸ்ஸே நந்திகடால்' எனும் சிங்கள நாவல் உட்பட ஏழு புத்தகங்கள் இதுவரை அவரால் எழுதப்பட்டுள்ளன. 'கடோல் அத்து' , 'உத்தர தேவி' மற்றும் 'கோட்டாபய' சிங்கள பதிப்பு என்பன அவரினால் எழுதப்பட்ட மேலும் சில புத்தகங்கள் ஆகும்.

புத்தகத்தின் முதல் பிரதிகளை ஸ்ரீ கல்யாணி சமக்ரி மகா சங்க சபாவின் பிரதம விகாராதிபதி அதி வண. இத்தப்பனே தம்மலங்கார தேரர், மகா சங்கத்தினர்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, லாலி கொப்பேகடுவ மற்றும் மானல் விமலரத்ன ஆகியோருக்கு பாதுகாப்புச் செயலாளரும் வழங்கி வைத்தார்.
இந்த புத்தக வெளியீட்டில் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பல்வேறு உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் யார் என்பதை 21 அத்தியாயங்களைக் கொண்ட வாசகர் நேய புத்தகத்தின் ஊடாக கமல் குணரத்ன எளிய நடையில் சக்தி வாய்ந்த முறையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

"கோட்டாபய, மிகச்சிறந்த அரசியல்வாதி, எழுச்சியூட்டும் தலைவர், அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு முன்மாதிரியான ஆளுமை மற்றும் எனது எண்ணத்தில் உயர்நிலையில் இருக்கும் மரியாதைக்குரிய ஒரு மனிதர்" என அவர் தெரிவித்தார்.

தலைமைத்துவம் தொடர்பாக சில புகழ்பெற்ற மேற்கோள்களை சுட்டிக்காட்டிய திரு வீரதுங்க, செழிப்பான மற்றும் சுபிட்சமான நாடு தொடர்பாக ஏனைய தலைவர்கள் கொண்டிருந்த பார்வையை விட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பார்வை சற்று வித்தியாசமானது என அவர் தெரிவித்தார்.

"ஏற்கனவே நிறுவப்பட்ட பழமையான மற்றும் நவீன காலத்திற்கு பொருந்தாத நடைமுறைகள் தொடர்பில் அவர் சவால்களை எதிர்கொண்டுள்ளார். ஒரு பெரிய கனவானது, குழு முயற்சி, திட நம்பிக்கை, வலுவான உறவு, ஆழமான திறமை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு என்பனவல்லாமல் நனவாக மாட்டாது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் செயற்திட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவம் தொடர்பாக குறிப்பிடும் போது அதற்காக பங்களிப்பு வழங்க கூடிய அனைத்து தரப்பினரையும் அவர் ஒன்றிணைத்துடன் அவர் அவர்களின் பின்னால் நின்று அவர்களுக்கு எப்போதும் ஊக்கமளித்தார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது படைவீரர்களுக்கு அவர் எவ்வாறு ஊக்கம் அளித்தார் என்பதை நாம் கண்கூடாக கண்டுள்ளேன் எனக் குறிப்பிட்ட அவர், இறுதியாக, இலங்கை பிரஜையினருக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை உருவாக்கும் ஒரு சிறந்த தலைவரை அனைத்து இலங்கையர்களும் கண்டுபிடித்துள்ளோம் என தெரிவித்தார்.

தனது முன்னைய நூல்கள் தொடர்பாக குறிப்பிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, பிரசித்தி பெற்ற 'ரோட் டூ நந்திக்கடல்' (நந்தி கடலுக்குக்கான பாதை) என ஆங்கில நூலினை கொள்வனவு செய்வதற்காக பலர் அணிவகுத்து நின்றதாக தெரிவித்தார்.

புதிய பதிப்பான 'பாத்தாளயோ' தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,இந்த புத்தகம் பாதாள உலக உறுப்பினர்கள் தங்களது உரையாடல்களுக்கு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் தனித்துவமான அவர்களுக்கே உரிய சொற்றொடர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர, நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு கழிவுப் பொருட்கள் அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புறவாக்கல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி என்றார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பிபி ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகே தென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முப்படைகளின் முன்னாள் தளபதிகள் பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட விசேட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment